Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Tuesday, December 23, 2008
என் தமிழ் சிந்தனைகளுக்கு குத்துவிளக்கு ஏற்றுதல்
என்னதான் ஆங்கிலம் என் முதல் பற்றானாலும், தமிழ் என் தாய்மொழி. எனக்கு தாயும் தமிழே, தெய்வமும் தமிழே. பள்ளிகூடத்தில் நான் தமிழ் படிக்கவில்லை. எனக்கு தமிழில் எழுதுவது சிரமம். தமிழ் படிப்பு தத்தளிப்பு. தமிழ் வார்த்தைகளை ஆங்கில சொற்களில் எழுதி தான் பழக்கம். உவமைக்கு, இதுவரை இங்கே நான் எழுதிய வரிகளிலும், இனி இங்கு நான் தமிழில் எழுத போகிற வரிகளிலும் எழுத்து பிழைகளும் சொல் தவறுகளும் இருக்கின்றதா இல்லையா என்று கூட என்னால் கண்டுப்பிடிக்க இயலாது. ஆனால் தமிழ் மொழி என் உடல் புகுந்து என் ஆத்மாவில் கலந்துவிட்டது. என் கரகோஷமும் தமிழில் தான், கதறலும் தமிழில் தான். இங்கே தமிழ் எழுத்துக்களை எழுதுவது சுலபம், நன்றி ப்லோக்ச்போடுக்கே. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. வாழ்க தமிழ், தங்கதமிழ் சங்கத்தமிழ்.
Subscribe to:
Posts (Atom)
